சனி, 26 செப்டம்பர், 2015

மணலிக்கீரை


மணலிக்கீரை

மணலிக்கீரை:
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்......

                பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 13 ஜூலை, 2015

சிறுநீரகக் கல் கரைய மருந்து...



"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி
லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்
அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி
இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்". 

                                                                                 - அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம் 
தேங்காய்ப்பூ - 25 கிராம் 
நெரிஞ்சி வேர் - 25 கிராம் 
மாவிலங்கம் வேர் - 25 கிராம் 
சிறு பூனை வேர் - 25 கிராம் 

இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.

              பகிர்வில் ர.சடகோபால்.BA 

தலை முடி வளர...



"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".

                                                                                    - அகத்தியர் குணபாடம் -

கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.

                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

சொறி சிரங்குக்கு மேல்பூச்சு


"நோயது சிரங்கு சொறி கரப்பான் ஏது
நுவலவொணாது ஆறாபுண்புரைகள் ஏது
நோயேது இன்னமும் ஒரு சேதி கேளு
நுணுக்கமாம் தேங்காயை கருகச்சுட்டு
கலங்காமல் அதில் பாதி மிளகும் சேர்த்து
நோக்கமாய் அரைத்துஅதை வழித்துக் கொண்டு
நோயேது மேல் எங்கும் மூனால் பூசு பூசே
நேர்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே"

                                                                 - போகர் வைத்தியம் 700 

தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

        பகிர்வில் ர.சடகோபால்.BA 

வியாழன், 2 ஜூலை, 2015

தூக்கமின்மை குறைய


பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும். 

ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.


                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 2 மே, 2015

அறுகம்புல்

அறுகம்புல்- [cynodon dactylon]

அருகம்புல் க்கான பட முடிவு
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள, கண் நோய், தலைநோய், கண் புகைதல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்து பிழிந்த சாற்றை கண்ணுக்கு பிழிய கண்நோய் விலகும், மூக்கிலிட  மூக்கிலிருந்து வடியும் குருதியும் நிற்கும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும்.
அருகன் வேரின் கணு போக்கி,10 கிராம் எடுத்து வெண்மிளகு 2கிராம் சேர்த்து குடிநீரிட்டு வடித்து அதில் 2கிராம் வெண்ணை கூட்டி உட்க்கொள்ள மூலக்கடுப்பு நீங்கும்.
தயிரில் அறைத்து கலந்து கொடுக்க , தணியாத வெள்ளை நோய் குணமாகும்.


                           பகிர்வில் ர.சடகோபால்.BA  

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

உத்தாமணி

உத்தாமணி(வேலிப்பருத்தி)
உத்தாமணி- dalmia extena (asclepiadace)
இது தென் இந்தியாவில் எங்கும் கிடைக்கும். இது கொடி வகையை சார்ந்தது.

இது கை கால் குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலிப்பு, இரைப்பு இருமல் ஆகிய நோய்களை நீக்கி பசியை அதிகப்படுத்தும்.
 
    இதன் வேர்,கொடி,இலை,பால் இவைகளினால் செய்த குடிநீரை ஒரு மண்டலம் உபயோகித்தால் வாத,பித்த நோய்கள் தோஷவிடங்கள் யாவும் நீங்கும். 


                     பகிர்வில் ர.சடகோபால்.BA  

சனி, 4 ஏப்ரல், 2015

கருநொச்சி

கருநொச்சி என்பது நொச்சி செடியைபோல்  தோற்றம் இருப்பினும் இலை தண்டு, பூ இவைகள் கருப்பு நிறமாக இருக்கும். இதை சமூலமாய் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து, வஸ்திரகாயம் செய்து சீசாவில் பத்திரப் படுத்தவும். இதை காலை மாலை தினமும் திரிகடிப் பிரமாணம் தேனில் குழைத்து சாப்பிட்டால் 40 நாட்களில் காய சித்தியாகும். நரை திரை நீங்கும். நல்ல வலிமையுடன் 100 ஆண்டுகள் வாழலாம் என சித்தர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. 
குறிப்பு
               இது கொல்லிமலையின் சோரமடையான் கோவிலுக்கு பின்புறமுள்ள ஒரு தோப்பில் இருக்கிறது.


               பகிர்வில் ர.சடகோபால்.  BA     

புதன், 25 மார்ச், 2015

தோல் நோய்கள்

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். 

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும். 

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். 

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் 
பூவரசன் வேர் 30 கிராம் 
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம் 
சிறுநாகப் பூ 15 கிராம் 
வெடியுப்பு 10 கிராம் 
புனுகு 10 கிராம் 

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும். 

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். 

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும். 

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். 

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது..

             பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஆஸ்துமா

ஆஸ்துமா: 

இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரண மாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 
அறிகுறிகள்: 
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும். 
காரணங்கள்: 
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம். 
மூலிகைகள்: 
 வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவெளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். 
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

மஞ்சள் காமாலை

காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும். 

சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும். 

செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும். 

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும். 

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும். 

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

முகப்பரு குறைய

சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை தடவினால் முகப்பரு குறையும்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

                     பகிர்வில் ர.சடகோபால்.BA