செவ்வாய், 22 நவம்பர், 2016

ஏலக்காய்

ஏலக்காய்



1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

3. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

4. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

5. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

6. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

7. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.


                            பகிர்வில் ர.சடகோபால்.BA

இளநரை




இளைஞர்களுக்கு இளநரை போக்கும்
கொட்டக்கரந்தை
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம
நமஸ்காரம்

இக்காலத்தில் அதிகமான இளைஞர்களுக்கு இளநரை இருக்கிறது
அவர்களுக்காக இந்த மருத்துவ பதிப்பு
40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும்
பயனளிக்கும்



கொட்டக்கரந்தை மூலிகை ஒரு காயகற்ப
மூலிகை. அதனுடைய அதிகமான பயன்
பற்றி அடுத்து விரிவாக பார்க்கலாம்.

படத்தில் உள்ள து போல் பூக்காத இளம்
கொட்டக்கரந்தை மூலிகையும் பூக்காத
வெள்ளை பூ கரிசலாங்கண்ணி மூலிகையும் சமூலமாக எடுத்து நிழலில் காயவைத்து
பொடிசெய்து மீண்டும் பாலில் பிட்டவியலாக செய்து வெயிலில் காய வைத்து பொடி
செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

தினம் காலை மாலை இருவேளை அவரவருடைய கைக்கு ஐந்து விரலால்
அள்ளும் அளவிற்கு சாப்பிடும் முன்பு
பாலில் மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும்

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி
சுத்தமான எள் எண்ணை 500 மில்லி
எடுத்து பக்குவமாக மெழுகு பதத்தில்
காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை
தலைக்கு தேய்த்து வர வேண்டும்.இள
நரை மற்றும் செம்பட்டை முடி மாறி முடி நன்றாக வளரும்.

மற்றும் அவர்களுக்கு மஞ்ச காமாலை
நோய் வராது. சளி இருமல் வராது
கொட்டக்கரந்தை மூலிகைக்கு எலும்பு
மஜ்ஜைக்குள் உள்ள காய்சலை போக்கும்
தன்மை உள்ளதால் எல்லாவிதமான சுரமும்
அவர்களுக்கு வராது.


                                பகிர்வில் ர.சடகோபால்.BA