செவ்வாய், 22 நவம்பர், 2016

ஏலக்காய்

ஏலக்காய்



1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

3. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

4. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

5. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

6. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

7. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.


                            பகிர்வில் ர.சடகோபால்.BA

இளநரை




இளைஞர்களுக்கு இளநரை போக்கும்
கொட்டக்கரந்தை
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம
நமஸ்காரம்

இக்காலத்தில் அதிகமான இளைஞர்களுக்கு இளநரை இருக்கிறது
அவர்களுக்காக இந்த மருத்துவ பதிப்பு
40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும்
பயனளிக்கும்



கொட்டக்கரந்தை மூலிகை ஒரு காயகற்ப
மூலிகை. அதனுடைய அதிகமான பயன்
பற்றி அடுத்து விரிவாக பார்க்கலாம்.

படத்தில் உள்ள து போல் பூக்காத இளம்
கொட்டக்கரந்தை மூலிகையும் பூக்காத
வெள்ளை பூ கரிசலாங்கண்ணி மூலிகையும் சமூலமாக எடுத்து நிழலில் காயவைத்து
பொடிசெய்து மீண்டும் பாலில் பிட்டவியலாக செய்து வெயிலில் காய வைத்து பொடி
செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

தினம் காலை மாலை இருவேளை அவரவருடைய கைக்கு ஐந்து விரலால்
அள்ளும் அளவிற்கு சாப்பிடும் முன்பு
பாலில் மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும்

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி
சுத்தமான எள் எண்ணை 500 மில்லி
எடுத்து பக்குவமாக மெழுகு பதத்தில்
காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை
தலைக்கு தேய்த்து வர வேண்டும்.இள
நரை மற்றும் செம்பட்டை முடி மாறி முடி நன்றாக வளரும்.

மற்றும் அவர்களுக்கு மஞ்ச காமாலை
நோய் வராது. சளி இருமல் வராது
கொட்டக்கரந்தை மூலிகைக்கு எலும்பு
மஜ்ஜைக்குள் உள்ள காய்சலை போக்கும்
தன்மை உள்ளதால் எல்லாவிதமான சுரமும்
அவர்களுக்கு வராது.


                                பகிர்வில் ர.சடகோபால்.BA

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

mooligai maruthuvam க்கான பட முடிவு

 தலைவலிகுணமாக: விராலி  மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
 இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து  காய் ந்தவுடன் வறுத்து  தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
 ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து  சின்ன வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினம் ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவான  உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து  மூக்கில் நுகர தலைவலி போகும்.
காசம் இறைப்பு நீங்க: கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
 தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
 ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
 சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
கபம் நீங்கி உடல் தேற: காரிசலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.
காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மையாக  அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.
                                     பகிர்வில் ர.சடகோபால்.BA